முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றி தொடரட்டும்............
முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றி தொடரட்டும்............
இழகிய இதழ்கள் இரண்டு
ஒன்றையொன்று வருடி
தேன் துளிகளை துளித் துளியாய்
சிதறடிக்கும் இணைப்பு
இதழ் முத்தம்
குழி விழு கன்னத்தை
இதழ் கொண்டு நிரப்பிட
மழலையாய் இதழ்களில் முகம் புதைத்து
முழு மூச்சாய் தரும் முத்தம்
கன்னத்தில் முத்தம்
புருவத்தின் மேற்பரப்பில்
காதலின் அடையாளம் தந்து
இதழ் கொண்டு இடும் திலகம்
நெற்றி முத்தம்
"ஒருவரை ஒருவர் உண்டு
ஒன்றாகி விட முடியா
உடல்களின் பெருந்தவிப்பை
ஒத்திப்பொடவென
இதழ்கள் கண்டெடுத்த வழி
முத்தம்"
முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றி தொடரட்டும்............
Post a Comment