சமுதாயம் எனும் கடைவீதி தனில் சமநீதி என்ன விலையோ?

நீதிதேவதை
நிற்கதியாகவே நிற்கிறாள்!


சமுதாயம் எனும் கடைவீதி
தனில் சமநீதி
என்ன விலையோ?

சட்ட மங்கை மடலாகவே
இருந்து கொண்டு
சமரச ஆண்மையை குறை சொல்கிறாள்

அடிமைகளை குளோனிங் முறையில்
இனப்பெருக்கிவிட்டு
சமஷ்டி தீர்விற்காய்
விரல் சூப்ப விடுகிறாள்

சமாதாண குமரிக்கும்
ஒப்பந்த திருமணத்தில்
திருப்தி இல்லாமல்
அதிகார ஓரினச்செய்கைக்கே
உடன்படுகிறாள்

தமிழ் பிள்ளைகள் இழந்த
அனாதை தாய்மார்களிடம்
போராட்டம் தினம் களவில்
பால் குடிக்கிறது

பாலியல் கொடுமைக்கு
தீர்வில்லாததால் நீதிதேவதை
நிற்கதியாகவே நிற்கிறாள்

ஆயிரம் ஆட்சி நல்லாட்சி
பெயரெடுத்தாலும்
நற் தீர்வுவொன்று
ஏட்டுச் சுரக்காய் தானே
இன்றுவரை......!

No comments