ஆயிரம் உறவெனிலும் அவள்தான் அம்மா..................

ஆயிரம் உறவெனிலும்
அவள்தான் அம்மா..................


குருதியாலும் குடலாலும் 
நிறைந்த இருட்டறையில்
தொப்புளில் பிணைத்த கயிறுடன்
வெளித்தெரியாமல் 
நான் அமர்த்தப்பட்ட
சிம்மாசனம் அவள்
                             கருவறை

ஒரு கொடி உறவில்
எனக்கும் அவளுக்குமான பந்தம்
அன்று வெட்டப்பட்ட கொடி 
உறவிற்கான முடிவல்ல
பாசத்தின் தொடக்கத்திற்காய்
வெட்டப்பட்ட ரிபன்

என் வெளிவருகையில்
அவள் வலியுருவாள்
என அறிந்திருந்தால்
கருவிலேயே காணாமல்
கரைந்து போயிருப்பேன்

அவளிற்கு வலியெடுத்து நான்
பிறந்ததால் தான்
எனக்கும் வலி்கும் போதெல்லாம்
அவளையே அழைக்கிறேன்

"உன்னையும் என்னையும் படைத்தது  இங்கே யாருடா........?
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் 
இருப்பது அவள் தாயடா........!"

No comments