உன்னிடத்தில் என் ஒருதலைக்காதல்...

ஒரு தலைக்காதல்




என் காதல் கண்டு
காதலும் என் மீது 
காதல் கொள்ள (கொல்ல)
என் காதலோ காதலே இல்லாத
அவளிடம்....!

எனது கவிகள் முகவரி அறிந்தும்
அவள் இதழ் சேரவில்லை
உதிர்த்த வார்த்தைகளும் 
உள்ளம் அறிந்தும் அவள்
செவி சேரவில்லை

காத்திருத்தல் சுகமே காதலில்
காத்திருப்பு மட்டுமே சுகம் 
ஒரு தலைக்காதலில்

தெரியாமல் அவள் விரல் தீண்டலில்
ஆயிரம் இரவுகள் உறக்கம்
துறக்கும் ஒரு தலைக்காதல் அழகே!

ஒற்றைச்சிறகில்  நான் வானத்தில்
வட்டமிட்டாலும் 
மற்றைய சிறகிற்றே எனது பயணம் என்பதை நன்கு உணர்ந்தே சிறகடிக்கிறேன்...

காதலில் கரைந்த என் ஒரு தலைக்
காதல் கண்டு
காதலும் கரைந்தே செல்லும்.......!

உன்னிடம் என் காதல் சேர்கையிலும்
மீண்டும் கேட்பேன் உன்னிடத்தில் என் ஒரு தலைக்காதலை............

No comments