உன்னோடு எவ்வழி பிறந்ததோ? இந்த சாதீ, மத,இன,மொழி வேற்றுமைகள்
சாதீ, மத,இன,மொழி வேற்றுமைகள்
விந்துக்கள் விரைந்து
கருவில் கரைந்து
சிசுவாய் மலர்ந்து
மாதங்கள் கடந்து....
மண்ணைத்தொட
முட்டலும் மோதுதலுமாய்
நரம்பறுக்க
தசைகள் கிழிய
எலும்புகள் நொருங்க
குருதி கொட்ட
விழிநீர் வடிய....
வலி கொண்ட அன்னை
மடியை விட்டு
எவ்வழியில் வந்தேனோ
அவ்வழியே நீயும் வந்தாய்
என்பதை நான் அறிவேன்
இதில் உன்னோடு எவ்வழி பிறந்ததோ?
இந்த சாதீ, மத,இன,மொழி வேற்றுமைகள்
நான் அறியேன்................!
Post a Comment