புதுப்பாலினம் இன்று புதினப்பாலினம்
புதுப்பாலினம் இன்று புதினப்பாலினம்!
பெண்மைக்குள் ஆண்மையையும்
ஆண்மைக்குள் பெண்மையையும்
கரைத்த இயற்கை
இயக்கு நீருக்கு சுதந்திரமளித்து
"புதுப்பாலினம்" தந்து
உயிர்க்க செய்தது இவர்கள் செய்த பிழையா?
புதுப்பாலினம் இன்று புதினப்பாலினமாக
பார்க்கப்படுகைக்கு காரணம்........
ஆணும் பெண்ணும் சமமென்னும்
சமுதாய சீர்திருத்தத்தின்
வடிவம் இவர்கள்
பரந்த இவ்வுலகில்.......
பெண்மையை சீரழிக்காத
ஆண்மையும்,
பெண்மையை ஏளனப்படுத்தும்
பெண்மையும்,
வறுமையினால் கையேந்தா
கைகளும்,
பாலியல் தொழிலுக்கு கரம் கொடுக்கா உயிரும் ..........
பிறவாத தேசம் உண்டெனில்
அத் தேசத்தில் இவர்களை இழித்து பேசும் வாய் திறக்கட்டும்...!
திருந(ங்கை)ம்பிகள்......
மூன்றாம் பாலாய்
முப்பாலினத்தின் முதன்மை பாலாய்
கொள்ள வேண்டியது
இன்றைய மணிதம்!
Post a Comment