என் பிறந்தநாள்....

என் பிறந்தநாள்



பிறப்பெனும் பிணியால்
மரணப்பதிவேட்டில் 
என் பெயர் பதித்த நாள் 

முட்டலும் மோதலுமாய்
பிணைந்த கொடியோடு
என் தாய் கருவறை விட்டு
தரை இறங்கிய நாள்

ஆசையுற்றும் மீள் செல்ல
முடியா சுவர்க்க சிம்மாசணம்
விட்டு நரக வாழ்கைக்காய்
வந்த நாள்

என் விழி நீர் வற்ற
துன்பங்களோடு எனது பயணம்
தொடர முதல் துளி சிந்திய நாள்

மீண்டும் நான் வேண்டாத
நாள் ............
என் பிறந்தநாள்

No comments