விலகி நிற்பதையே என் காதல் வெற்றியாய் கருதுகிறேன்...!

விலகி நிற்பதையே
என் காதல் வெற்றியாய்
கருதுகிறேன்...!




திரைகடல் தாண்டிய
என் வெளிநாட்டுப் பயணம்
திரை மூடிய உன் உடலை
திறந்து விட்டதா?

அரை குறை ஆடையில்
விலைமாதுக்கள் பலர் இருந்தும்
உடல் நோய் வாட்டி வதைத்த போதும்
கட்டிய மனைவி உனை
கற்பனையில் நினைத்தே
வாழ்ந்திருந்தேன்

காதலித்து கரம் பிடித்திருந்தும்
உன்னில் பாதியான என்னை மறந்து
வேறொருவனுக்கு உனை பகிர்ந்த
வேளையில்.............
என் காதலின் தோல்வி உணர்ந்தேன்

உன்னை எனது மனைவியாக மட்டுமல்ல
முதல் குழந்தை
இரண்டாம் தாய்
கடைசி காதலியாகவும் பார்த்திருந்தேன்.......

இனி என் நினைவுதனில்
உனது நினைவுகளை கூட
நிலை நிறுத்த விரும்பவில்லை

நீ ஆசையுற்ற வாழ்வை
உனை வாழ விடுத்து
நான் விலகி நிற்பதையே
என் காதல் வெற்றியாய்
கருதுகிறேன்...!

No comments