"உயரத்தில் இருந்தாலும் உயராத ஓர் இனம் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்"

"உயரத்தில் இருந்தாலும்
உயராத ஓர் இனம்
தேயிலை தோட்ட தொழிலாளர்கள்"



மண் சரிவிற்கும், 
மழைக்காற்றிற்கும்
வெயிலுக்கும்
இயற்கை சீற்றம் எதுவாயினும்
பழக்கப்பட்டதே என்  'லயம்'

லயம்........
இலாவகமாக அடுக்கப்பட்ட
தகரங்களின் தற்காலிக கூடு

கொழுந்து செழிப்பதை போல
ஒரு போதும் நாங்கள்
செழித்ததில்லை

மூன்று நேர உணவிற்காக
முப்பது கிலோ வரை
கொழுந்துக்களை 
துரைகளுக்கு கப்பம் கட்டுகிறோம்

 அடிப்படை ஊதியத்தை கூட
இதுவரையில்
நாங்கள் ஊகித்து பார்த்ததில்லை

நாட்டின் பொருளாதாரத்தில்
75 வீதம் எங்கள் பங்கெனிலும்
ரூ.750ஐ சம்பளமாய் பெறுவதற்குள்
மரணித்து நிமிர்கிறது
'மலையகத்தோர்' வாழ்கை

அண்ணியர் ஆட்சியில்
அண்டை நாட்டிலிருந்து வந்த
காரணமோ......?
அடிப்படை உரிமை கூட
..................................................!

No comments