கவிதை எழுதுவதால் நான் கண்ணதாசனும் இல்லை கறுப்பாக இருப்பதால் வைரமுத்துவும் இல்லை
இரண்டாம் கவி
என் நரம்பு வழி நிறைந்து
வழிந்தது ஓர் தொடர்........
நான் அதை கவிதை என்கிறேன்
காற்று அதை இசை என்கிறது
காதல் அதை இயல்பென்கிறது..
வார்த்தைகளால் நீ உன்
கோபத்தை காட்ட
வரிகளால் நான்
சோகத்தை காட்டுகிறேன்
ஏதோ ஒன்றை
எழுத தொடங்கினேன்
மையாக நீயே வழிந்து கொண்டிருந்தாய்
முடிவில் அது
உன்னை அடுத்து இரண்டாம்
கவியானது....
மீண்டும் மீண்டும்
எழுதிககொண்டே இருக்கிறேன்
வார்த்தைகளும் முடிந்த பாடில்லை
என் விரல்களும் ஒய்ந்த பாடில்லை
ஓயாமல் எழுதும் என் விரல்களுக்கு
முடிவும் இல்லை
என் கவிகளுக்கு முற்றும் இல்லை
கவிதை எழுதுவதால்
நான் கண்ணதாசனும் இல்லை
கறுப்பாக இருப்பதால்
வைரமுத்துவும் இல்லை
காகிதங்களில் கிறுக்கும்
கிறுக்கர்களில்
.................................நானும் ஒருவன்
Post a Comment