என் மையநரம்புத் தொகுதியில் தொற்றிக் கொண்ட மையலின் தாக்கம்...
காதல் ஐதாகிறது.....
என் மையநரம்புத் தொகுதியில்
தொற்றிக் கொண்ட
மையலின் தாக்கம்
மூளையையும் முண்ணானையும் கூட
செயற்பட விடுவதில்லை
உனது திமிரின் கணத்தாக்கங்களை
அகத்துறிஞ்சிக் கொள்கிறேன்
ஆதலால்தான் இன்னமும்
சமனிலையின் இருக்கிறேன்
என் சுற்றோட்டத் தொகுதியில்
சுற்றிக் கொண்டிருக்கும்
உனது நினைவலைகள்
நெட்டாங்கு அலைகளாக எனை
தொடர்கின்ற போதும்
நாடி நாளங்களிலும்
காதலின் அமுக்கத்தில்
மறுதாக்கத்தையே மறுபதிப்பு
செய்கிறது
உனக்கு எனக்குமான
இடைப்பட்ட
தூரத்தில் காற்று
நெருக்கப்படுகிறது
காதல் ஐதாகிறது
நீரில் கரையும் கறி உப்பாக
உன்னில் கரைந்து நான்
காணாமல் போன போதும்
இரும்பு தூள்களை உறிஞ்சும்
காந்தமாய் - உன் கண்கள்
என் வெளிவடிவத்தையும்
விட்டுவைப்பதில்லையே
என் காதல் அவதானிப்பின்
பரிசோதனை முடிவிற்காய்
காத்திருக்கிறேன்..............?
என் மையநரம்புத் தொகுதியில்
தொற்றிக் கொண்ட
மையலின் தாக்கம்
மூளையையும் முண்ணானையும் கூட
செயற்பட விடுவதில்லை
உனது திமிரின் கணத்தாக்கங்களை
அகத்துறிஞ்சிக் கொள்கிறேன்
ஆதலால்தான் இன்னமும்
சமனிலையின் இருக்கிறேன்
என் சுற்றோட்டத் தொகுதியில்
சுற்றிக் கொண்டிருக்கும்
உனது நினைவலைகள்
நெட்டாங்கு அலைகளாக எனை
தொடர்கின்ற போதும்
நாடி நாளங்களிலும்
காதலின் அமுக்கத்தில்
மறுதாக்கத்தையே மறுபதிப்பு
செய்கிறது
உனக்கு எனக்குமான
இடைப்பட்ட
தூரத்தில் காற்று
நெருக்கப்படுகிறது
காதல் ஐதாகிறது
நீரில் கரையும் கறி உப்பாக
உன்னில் கரைந்து நான்
காணாமல் போன போதும்
இரும்பு தூள்களை உறிஞ்சும்
காந்தமாய் - உன் கண்கள்
என் வெளிவடிவத்தையும்
விட்டுவைப்பதில்லையே
என் காதல் அவதானிப்பின்
பரிசோதனை முடிவிற்காய்
காத்திருக்கிறேன்..............?
Post a Comment