கொடூரத்திற்கு காரணம்

கொடூரத்திற்கு காரணம் ஒன்றே



வித்தியா,ரெஜினா வரிசையில்
வேட்டை நாய்களுக்கு இலக்கான
மற்றும் ஒருத்தி

தூய்மைக்கு இலக்கணம் 
வெண்மையில் அழுக்குப் படிந்து
அங்கே......!
துவண்டு கிடந்தது ஒரு பெண்மை

ஒரு உத்தியோகத்தரின்
இரண்டு பேனாக்களும் அங்கே
இரத்தக்கறை படிந்து 
வீசப்பட்டு......
உரியவள் யாரென காண்பதற்கு
இறுதி மைத்துளி சிந்தியது

குமரியாய் இருக்கையிலும்
கசக்கப்பட்டது புங்குடு தீவு பூ
குழந்தையாய் இருக்கையிலும்
பறிக்கப்பட்டது மழழை மொட்டு
குழந்தைகளின் தாயாய்  இருக்கையிலும் பெண்மை
சிதைக்கப்பட்டது என்கையில்
.........................................................
அடுத்த வரி சொல்வதற்கும் வார்தைகள் எழவில்லை

பெண்னாய் பிறந்தது தான் குற்றமா?

No comments