தன் நீர் தான் காக்க தமிழனாய் தலை நிமிர்த்தி வாரீர்

மீன்பாடு தேனாட்டைபாலை வனமாக்கும் திட்டம்......


தன் நீர் தான் காக்க
தமிழனாய் தலை நிமிர்த்தி
புல்லுமலை தான் இன்றி
மட்டுநகரும் சேர்.............
ஏர் பூட்டும் உழவன் தாய் நீர்
காக்க வாரீர்........

போர்களம் சென்று
இரத்தக்கறை வென்று
சடுதியில் வஞ்சக வலை வீழ்ந்து
மீள்குடியேற்ற நிலையில்
இனம் வாழ 
குடி நீரை ஏற்றும் திட்டம்
கண்டு ஓடி ஒழிவதுதான் 
தமிழ் தாய் புகட்டிய வீரமா?

என் அன்னை மடி நீர் எடுத்து
அரபு நாட்டிற்கேற்ற 
ஒப்பமிட்ட கைகளுக்கு 
உரக்கச்சொல்கிறோம்
எங்கள் கைகள் ஓங்கும் நாள் 
தொலைவில் இல்லை!

போர்க்களம் வேண்டாம்
துறப்பதற்கு உறவுகள் இல்லை!
ஆயுதங்கள் வேண்டாம் 
இழப்பதற்கு அங்கங்களும் இல்லை!
அகிம்சைப்  போராய்
நிலைநாட்டுவோம் நீரின் நீதியை!

அடைக்கப்பட போவது கதவுகள் அல்ல
அரபு நாட்டிற்கான கனவுகள்
இன்றைய கர்த்தால் 
தமிழனை ஏய்த்துப்பிழைக்க 
எண்னிய கயவர்களுக்கான
கருமுற்றுப்புள்ளி.

No comments