குயிலிசை மட்டுமல்ல குயில் முகமும் தேவைதான்
கறுப்பு என்பது நிறமல்ல அது நிறங்களின் இல்லாமையே!
"கறுப்பு" என்பது ஓர் நிறமல்ல
அது நிறங்களின் இல்லாமையே
ஆதலால் தான் நானும்
அதனோடு ஒத்துப்போகிறேன்
ஒரு போதும் இருளை கண்டு
நான் பயந்ததில்லை
நானும் இருளின் சாயத்திலே
இருப்பதால்
தோல் தேய்ந்து தொலைந்து
போகும் வரை கழுவுகிறேன்
கறைபடிந்த என் கறுப்பு
நிறத்தை........
எனது உணர்வுகளும் உள்ளமும்
நிறமாய் இருந்தும்
உருவம் அவ்வாறில்லை
இங்கு குயிலிசை மட்டுமல்ல
குயில் முகமும் தேவைதான்
வண்ணமிடப்படாத ஒவியமாய்
நான் இருக்க
வண்ணத்துப்பூச்சி ஒன்று
வலம் வருவது ஏனோ..?
Post a Comment