நாட்டின் நல்லாட்சி இது தானா.?

நாட்டின் நல்லாட்சி இது தானா.?


நல்லாட்சி என்று உனை
நம்பி ஏற்றதன் விளைவே
இன்று நடந்து செல்லும்
நிலை எமக்கு!

அத்தியாவசிய பொருள்
விலை உயர்வும்
அண்ணிய செலாவனி தொய்வும்
நூறுநாள் திட்ட ஏற்பின்
நன்றிக் கடனோ?

போராட்டங்கள் வீதி விளக்காய்
தெருதோறும் நடந்தாலும்
திரும்பி பார்க்க ஆள் இல்லா
ஆட்சி!

கயவர்களை கூண்டேற்றும் 
வாக்குறுதி மலையேறி 
"ஊழியர் சேமலாப" நிதியைக்கூட 
கொள்ளையடித்த கொள்ளையர்
ஆட்சி!

அதிகாரிகள் மாற்றமே தவிர
ஆட்சி மாறவில்லை
இன்றைய அரசியலும்
மாறவில்லை........

இராமன் ஆண்டாலும்
இராவணன் ஆண்டாலும் 
எமக்கொரு பயனுமில்லை.....!

No comments