அன்பெனும் வியாபாரத்தை விலைக்கழிப்பும் செய்து விட்டேன்
இன்று நானும் வாடிக்கையாளனாகி காத்திருக்கிறேன் ..
நாள்தோறும் உன் நினைவுகளை
மனதளவில் ஏற்றுமதி
செய்து கொண்டே இருக்கிறேன்
சுமக்க முடியா
பெருஞ்சுமையாகி விட்டதால்
கதவடைப்புச் செய்யவென
காத்திருக்கிறேன்
அன்பெனும் கொடுக்கல் வாங்கல்
வியாபாரத்திலும்
பாரிய நட்டமடைந்து விட்டதால்
முதலீடுகளை கூட பெறமுடியா
கடனாளியாகிவிட்டேன்
பகிர்ந்தளிக்கவென பொதியிட்ட
பொதிகள் கூட
காலாவதியாகி விட்டதால்
பாழடைந்துவிட்டன
வாடிக்கையாளன் இல்லா
வர்த்தகனாகி விட்டதால்
வருமானங்கள் ஏதுமற்ற
அன்பெனும் வியாபாரத்தை
விலைக்கழிப்பும் செய்து விட்டேன்
இன்று நானும்
வாடிக்கையாளனாகி
காத்திருக்கிறேன்
அப்பொழும் கூட
எனக்கான வர்த்தகத்தை
பெற இயலவில்லை....!
Post a Comment