நெடுஞ்சாலை வீதிகளில் அரை நிர்வானமாய் பல சிறுசுகள்

யார் காரணம்..............?


நெடுஞ்சாலை வீதிகளில்
அரை நிர்வானமாய் பல சிறுசுகள்
கையில் கனி ஏந்தி
காத்துக் கொண்டும்.........!
கை நீட்டிக் கொண்டும்.....!

சக்கர வாகனங்களின்
சடுகதி வேகங்களுக்கு
பல பழங்கள் நசுக்கப்படுவதும்
பருவத்திற்கு எண்ணிக்கை கூடுவதும்
தொடர் கதையே!

யாரை நோவதென்று அறியேன்.......
இறைவா!
உனையே நொந்து கொள்கிறேன்
நீ தான் காரணம் அறிந்தும்
கல்லாகவே இருப்பாய்.....!


No comments