காதல் கைதியான எனக்கு சிறைச்சேதம் விடுத்தாய்...!

உன்னிடம் காதல் கைதியான எனக்கு சிறைச்சேதம் விடுத்தாய்...!


உன் விழித்திரையில் வழுக்கி விழந்து
திருடிய  இதயத்தை
திருப்பிக் கொடுப்பதாயில்லை
சிறைச்சேதம் என்றாலும்
சித்திரவதை தந்தாலும்
காதல் சிறை விடுத்து வெளிவரும்
எண்னமும் இல்லை....!

காதல் கைதியாகிய பிறகும்
மேன்முறையீடு செய்கிறேன்
ஆயுள் கைதியாய் எனை
அனைத்துவிடு!

என் நடத்தையை காரணம் காட்டி
பிணை வழங்கிவிடாதே
உன் மனச்சிறை விடுத்து , செல்ல
துளியும் விருப்பமில்லை

கைதிகளின் பார்வை நேரத்தில் கூட
எனை வெளிக்காட்டாதே
என் நலம் கண்டு பல திருடர்கள்
முயற்சிக்கலாம்.............................
உன்னிடம் கைதியாகி விட....!

No comments